மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் யாகங்கள்: உயர் நீதிமன்றம்

மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் யாகங்கள்: உயர் நீதிமன்றம்வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழக ஜோதிடர்களைப் போல மேலைநாட்டவர்களால் கூட வானவியல் நிகழ்வுகளைக் கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்தாண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் யாகம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு. இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பட்டது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், மழை வேண்டி கோயில்களில் நடைபெற்று வரும் யாகத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இன்று (மே 15) இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசே பணம் ஒதுக்குவது சட்டவிரோதமானது எனவும், அரசாங்கமே இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக ஜோதிடர்களைப் போல அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். இது போன்ற யாகங்கள் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுவதாகக் கூறி, அன்பழகனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon