மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

வாராக் கடன் வசூலில் சாதனை!

வாராக் கடன் வசூலில் சாதனை!

2018-19 நிதியாண்டில் வங்கி திவால் சட்டம் வாயிலாக ரூ.70,000 கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாக கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடி மற்றும் வாராக் கடன் ஆகியவற்றால் இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. வங்கிகளை மீட்க அரசு தரப்பிலிருந்து மூலதன உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்ற 2017-18 நிதியாண்டில் கடன் மீட்புத் தீர்ப்பாயம் மற்றும் லோக் அதாலத் உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக ரூ.35,500 கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் வசூல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 2018-19 நிதியாண்டில் வங்கி திவால் சட்டத்தின் வாயிலாக ரூ.70,000 கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடன் மீட்பு விகிதம் 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் கடன் மீட்பு விகிதம் வெறும் 26.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி வரையில் வாராக் கடன் மீட்பில் வங்கி திவால் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,143 வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இதில் 32 சதவிகித வழக்குகள் 270 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்ததாகவும் கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon