மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம்: அமேசான்!

ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம்: அமேசான்!

உலகளவில் மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் உறுப்பினர்களுக்கு சரக்குகளை வேகமாக கொண்டுசேர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தனது ஊழியர்களுக்கு ஒரு சலுகையை அமேசான் வழங்கியுள்ளது. அதாவது, அமேசான் ஊழியர்கள் தங்களது வேலைகளை ராஜினாமா செய்தால் அவர்களுக்கு 10,000 டாலர் (ரூ.7 லட்சம்) வழங்கப்பட்டு புதிய டெலிவரி நிறுவனம் ஒன்றை அமைக்க அமேசான் சார்பாக அனைத்து உதவிகளும் செய்துதரப்படும்.

அந்நிறுவனங்கள் அமேசானின் சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு வேகமாக கொண்டுசேர்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு அமேசானின் நீல வாகனங்களை ஒப்பந்தத்திற்கு எடுத்து பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கப்படும். மேலும், ஒப்புக்கொள்ளும் ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் அனைத்து முழு நேர, பகுதி நேர ஊழியர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமேசானின் சரக்குக் கிடங்குகளில் பணிபுரிபவர்களுக்கும்கூட இந்த ஒப்பந்தம் பொருந்தும். அமேசான் நிறுவனம் சரக்கு டெலிவரிகளுக்காக தபால் துறை மற்றும் இதர டெலிவரி நிறுவனங்களை சார்ந்து இயங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறி தனது சொந்த டெலிவரி அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமேசான் களமிறங்கியுள்ளது. இதனால் மற்ற டெலிவரி நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon