மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 15 செப் 2019

எலெக்ட்ரிக் வாகனங்களால் பெருகும் வேலை!

எலெக்ட்ரிக் வாகனங்களால் பெருகும் வேலை!

வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனத் துறை 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம், சுற்றுச் சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாறிவருகிறது. இதனால் வாகன எஞ்சின் விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நோக்கிய பயணத்தில், எலெக்ட்ரிக் வாகனத் துறைக்குத் தேவையான மனித சக்தி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் இறங்கியுள்ளது.

வடிவமைப்பு, பரிசோதனை, பேட்டரி உற்பத்தி, விற்பனை, சேவை மற்றும் உள்கட்டுமானம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேலையாட்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் 1 கோடி வேலை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆய்வு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சாலைகளில் சுமார் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்கும்படியான திட்டம் ஒன்று 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வாகனப் போக்குவரத்தில் 30 சதவிகித அளவை எலெக்ட்ரிக் மயமாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும், மத்திய அரசின் ஆட்டோ மெஷின் திட்டத்தின் கீழ் கூடுதலாக 6.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon