மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

வீல்சேரில் தப்ஸி ஆடும் கேம்!

வீல்சேரில் தப்ஸி ஆடும் கேம்!

“நம் எல்லோருக்கும் இரண்டு வாழ்க்கை உள்ளது. இரண்டாவது வாழ்க்கை, ஒன்று மட்டுமே நம்மிடமுள்ளது என்பதை அறிந்தவுடன் தொடங்குகிறது”. கேம் ஓவர் படத்தின் சுவாரஸ்யமான டீஸரில் வரும் டேக் லைன் இதுவே.

ஆடுகளம் படத்தில் ஐரீனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தப்ஸி பண்ணு, பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் ரீ எண்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் பாலிவுட்டைப் போலவே பிரதான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தின் சுவாரஸ்யமான டீஸர் வெளிவந்துள்ளது.

வீடியோ கேமை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீஸரில் கேம் டிசைனராக தப்ஸி பணிபுரிகிறார் என காட்சிகள் மூலம் தெரிகிறது. விபத்தினால் வீல் சேரிலேயே வாழ்வை கழிக்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் தப்ஸி நடித்துள்ளார். ஒரு தரமான ஹாரர் படத்திற்கான பதட்டத்தை 1.25 நொடிகளிலேயே நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது கேம் ஓவர் டீஸர். பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தங்கள் மூலம் சிறப்பான திரைமொழியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியான சில மணி நேரங்களிலே வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடித்த மாயா, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இரவாக்காலம் போன்ற படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன், கேம் ஓவர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு, ரான் இத்தன் யோஹன் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப், படத்தின் மேக்கிங்கில் பெரிதும் ஈர்க்கப்பட்டு இந்தி வெர்ஷனை வெளியிட முன்வந்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் கேம் ஓவர் ஜூன் 14ஆம் தேதி வெளிவரவுள்ளது.

கேம் ஓவர் டீஸர்

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon