மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

சின்ன காக்கா முட்டையின் ‘பிழை’!

சின்ன காக்கா முட்டையின் ‘பிழை’!

பொதுவாக குழந்தைகள்தான் பெற்றோர்களை ஒரு படத்துக்கு அழைத்துச் செல்ல அடம்பிடிப்பர். ஆனால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் படமாக ‘பிழை’யிருக்கும் என்கிறார் அதன் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா.

காக்கா முட்டை படத்தில் வந்த சின்ன காக்கா முட்டையை நினைவிருக்கிறதா? ரசிகர்களை ஈர்த்த ‘சின்ன காக்கா முட்டை’ ரமேஷ் மீண்டும் ஒரு சிறுவர்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் பிழை என்ற படத்தில் ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று முடியும் தறுவாயில் இருக்கிறது.

பிழையின் கதை பற்றி இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “பெற்றோர்களைப் புரிந்து கொள்ளாமல் மூன்று சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். அதன் பின், வெளிப்புற உலகில் அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் அவர்களுடைய பெற்றோரின் செயல்கள் தங்கள் சொந்த நலனுக்காகத் தான் என்பதை உணர வைக்கிறது. நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியாவது படம் பார்ப்பவர்களின் சிறு வயதை நினைவுக்குக் கொண்டு வரும். பொதுவாக குழந்தைகள்தான் பெற்றோர்களை ஒரு படத்துக்கு அழைத்துச் செல்ல அடம்பிடிப்பர். ஆனால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் படமாக ‘பிழை’யிருக்கும் ” என்று கூறியுள்ளார்.

சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். மே மாத இறுதிக்குள் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon