மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

தூத்துக்குடி: நினைவஞ்சலியில் 500 பேருக்கு அனுமதி!

தூத்துக்குடி: நினைவஞ்சலியில் 500 பேருக்கு அனுமதி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த ஆண்டு மே 22ஆம் தேதியன்று பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்களில் சிலர் வன்முறையை நிகழ்த்தியதாகக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், வரும் 22ஆம் தேதியன்று நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி தர மறுத்தது காவல் துறை.

வரும் மே 22ஆம் தேதியன்று துப்பாக்கிச் சூடு நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தூத்துக்குடியில் நடத்த அனுமதி தர வேண்டுமென்று பேராசிரியை பாத்திமா பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 9ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி அமர்வு. இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் யாரெல்லாம் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, தூத்துக்குடி பெல் ஹோட்டல் உள் அரங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த வேண்டுமென்றும், காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று (மே 15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதையடுத்து, இந்த வழக்கை முடிவுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon