மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

பாகுபலி வில்லனின் அடுத்த அவதாரம்!

பாகுபலி வில்லனின் அடுத்த அவதாரம்!

மைனா, கயல், கும்கி ஆகிய படங்களின் இயக்குநரான பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் ராணா டகுபதியின் வயதான கெட்டப் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

ராணா டகுபதி,விஷ்ணு விஷால்,சோயா ஹுசைன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘காடன்’ என்றும் தெலுங்கில் ‘அரன்யா’ என்றும் ஹிந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ராணா மூன்று மொழிகளில் நாயகனாகவும்,சோயா ஹுசைன் மூன்று மொழிகளில் நாயகியாகவும், விஷ்ணு விஷால் தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது தவிர ஸ்ரீயா பில்கோன்ஹர், கல்கி கோச்சலின், புல்கிட் சாம்ராட் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தொடரி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. எனவே தன் அடுத்த படமான காடன் திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்ற தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

“ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தன் சுயலாபத்திற்காக ஒரு காட்டை அழித்து அங்கு வாழும் யானைகளையும், மனிதர்களையும் துரத்த நினைக்கிறது. இதை அக்காட்டில் வசிக்கும் ஒருவன் எதிர்த்து போராடுகிறான்”. இது தான் இப்படத்தின் மையக் கரு எனக் கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்திற்கு பின் ராணா நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே தமிழில் இதே கதையம்சத்துடன் ஆர்யா நடிப்பில் கடம்பன் படமும், ஜெயம் ரவி நடிப்பில் வனமகன் படமும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon