மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

இறக்குமதி வரி உயர்வு: காலக்கெடு நீட்டிப்பு!

இறக்குமதி வரி உயர்வு: காலக்கெடு நீட்டிப்பு!

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்துவதற்கான காலக்கெடு ஜூன் 16ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே உலக நாடுகளுக்கு கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் அமெரிக்க அரசு விதித்து வருகிறது. சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அதிக வரிகளை அமெரிக்கா விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 2018 ஜூன் மாதத்திலிருந்து இதுவரையில் பல முறை இதற்கான கால வரம்பு இந்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வால்நட், பாதாம், பருப்பு உள்ளிட்ட 29 பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு ஜூன் 16ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதன் காலக்கெடு மே 2ஆம் தேதியாக இருந்தது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக் குறைக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டதன் விளைவாக இந்தியா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. அத்தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு தனது ஏற்றுமதி வர்த்தகத்தில் 5.6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon