மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

மோடியின் பொய்களை அடுக்கும் இணையதளம்!

மோடியின் பொய்களை அடுக்கும் இணையதளம்!

பிரதமர் நரேந்திர மோடி பேசும் பொய்களை தொகுத்து வழங்க புதிய இணையதளம் உருவாகியுள்ளது.

மே 12ஆம் தேதியன்று நியூஷ் நேஷன் ஊடகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், “1987-88ஆம் ஆண்டில் நான் முதல்முதலாக டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தினேன். அக்காலத்தில் மிகச்சிலர் மட்டுமே மின்னஞ்சல்களை பயன்படுத்தினர். அப்போது, அத்வானி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவரை நான் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்தேன். அப்படத்தை மின்னஞ்சலில் டெல்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே வண்ணப்படமாக வெளியாகியது. அதைக் கண்டு அத்வானி வியந்துபோனார்” என்று கூறினார்.

1987-88ஆம் ஆண்டில் டிஜிட்டல் கேமராவையும், இணையத்தையும் பயன்படுத்தியதாக மோடி கூறுகிறார். உலகிலேயே முதல் டிஜிட்டல் கேமரா 1989ஆம் ஆண்டில் ஜப்பானில் விற்பனையாகியுள்ளது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். இரண்டாவதாக, உலகம் முழுவதும் இணையச் சேவைகள் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவிலோ, 1995ஆம் ஆண்டில் விஎஸ்என்எல் நிறுவனத்தால் முதல்முதலாக இணையச் சேவைகள் தொடங்கப்பட்டது. இதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை பயன்படுத்தியதாக மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது குடும்பத்துடன் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலில் சுற்றுலா சென்றதாக அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், ராஜீவ் காந்தி போர்க்கப்பலில் குடும்ப சுற்றுலா செல்லவில்லை எனவும், அரசு பயணமாக லட்சத்தீவுகளுக்கு சென்றதாகவும் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதைத்தொடர்ந்து மோடி மவுனம் காத்துவிட்டார்.

இதுபோல மோடியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அவர் பேசிய அனைத்து பொய்களையும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்டுள்ளது ஒரு இணையதளம். 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த மே மாதம் வரை பிரதமர் மோடி கூறிய அனைத்து பொய்களும் இந்த இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆண்டு வாரியாகவும், மாத வாரியாகவும் மோடி பேசிய பொய்களை ஒரே கிளிக்கில் தேடித் தெரிந்துகொள்ளவும் இந்த இணையதளம் வழிவகை செய்துள்ளது. இந்த இணையதளத்தை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon