மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

தங்க மகளுக்கு தங்கம் பரிசளித்த ரசிகர்கள்!

தங்க மகளுக்கு தங்கம் பரிசளித்த ரசிகர்கள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட இலக்கியா தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்குபெற்றனர். இதில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இரு தங்க பதக்கங்களை வென்று வெற்றிபெற்றுள்ளார் இலக்கியா.

இலக்கியாவை, உற்சாகப்படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் நேரில் சென்று தங்கச் சங்கிலி ஒன்றினை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon