மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது: மோடி

ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது: மோடி

ஒருவர் இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். அவரது பேச்சு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. மேலும், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் ஊடகத்துக்குப் பிரதமர் மோடி பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இந்து தீவிரவாதி தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி,”எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ’வசுதேவ குடும்பகம்’ என்பதே இந்து மதத்தின் தத்துவம். அந்தவகையில் உலகமே ஒரு குடும்பம், இந்து மதம் எந்த ஒரு நபரையும் காயப்படுத்தவோ, கொலை செய்யவோ அனுமதிக்காது. அதனால் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது” என்று பதில் தெரிவித்துள்ளார் மோடி.

இதற்கிடையே, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கமல் பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல், டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று கேள்வி எழுப்பி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon