மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

லோக்கல் வாக்: தயாராகும் சிவகார்த்தி ரசிகர்கள்!

லோக்கல் வாக்: தயாராகும் சிவகார்த்தி ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் தான் தற்போதைய சோஷியல் மீடியாவின் ஹாட் டிரெண்டிங்.

அம்மாவான ராதிகாவுடன் சேட்டைகள் செய்வது, காதலியான நயன்தாராவை கொஞ்சுவது, யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோருடன் பல அராஜகங்களை செய்வது என எங்கும் சிவகார்த்திமயமாக இருக்கிறது சோஷியல் மீடியா. பாட்டு மற்றும் டிரெய்லர் ரிலீஸுக்கே அதகளப்படுத்திய சிவகார்த்தி ரசிகர்கள், இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோக்களை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், தற்போது ஒரு போட்டியை அறிவித்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடந்து வருவது போன்ற பல காட்சிகளை ஒன்றிணைத்து, சிவகார்த்தியைப் போலவே சூப்பராக நடக்கத் தெரிந்தவராக இருந்தால், உங்களது நடையை வீடியோவாக எடுத்து #MrLocalWalk என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வெளியிடுங்கள் என்று கூறியிருக்கின்றனர். சாதாரணமாகவே டிக் டொக் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டில் இருக்கும் நெட்டிசன்கள், இதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு களமாடி வருகின்றனர்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon