மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

ஏசி வெடித்ததில் 3 பேர் பலி!

ஏசி வெடித்ததில் 3 பேர் பலி!

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக ஏசி வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள காவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கலைச்செல்வி. இந்த தம்பதியருக்கு கோவர்த்தனன், கவுதமன் என்று இரண்டு மகன்கள். கோவர்த்தன் அதிமுக மாணவர் அணியில் உள்ளார். டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார் கவுதமன். நேற்றிரவு ஏசி பொருத்தப்பட்ட அறையில் தனது பெற்றோருடன் தூங்கினார் கவுதமன். கோவர்த்தன் தனது மனைவியுடன் ஏசி பொருத்தப்படாத அறையில் இருந்தார்.

இந்நிலையில், இன்று (மே 15) அதிகாலையில் ராஜ் வீட்டில் இருந்து வெடிச்சத்தம் எழுந்துள்ளது. அதன்பின்னர் புகை பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அந்த வீடு முழுவதுமாகத் தீப்பற்றியது.

கடும் முயற்சிக்குப் பின்னர், வீட்டினுள் நுழைந்தனர் தீயணைப்புப் படையினர். ஆனால் ராஜ், கமலா, கவுதம் மூவரும் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மூன்று சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon