மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அப்பாவை வைத்து அனுதாப அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

அப்பாவை வைத்து அனுதாப அரசியல் செய்கிறார் ஸ்டாலின்:   எடப்பாடி பழனிசாமி

கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி நிலம் கூட எடப்பாடி தர மறுத்துவிட்டார் என்று கடந்த மக்களவைத் தேர்தலிலும், நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

ஸ்டாலினுடைய இந்த பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 14) சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பதில் அளித்திருக்கிறார்.

சூலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், “முன்னாள் முதல்வரான திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய நான் ஆறடி நிலம் தர மறுத்துவிட்டேன் என்ற ஒரு செய்தியை ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.

மெரினா கடற்கரையில் அம்மாவை அடக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடுத்திருந்தனர். மேலும் இனி யாரையும் மெரினாவில் அடக்கம் செய்யக் கூடாது என்றும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு நடந்துகொண்டிருந்தது. எனவே மொத்தம் 4 வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. ஸ்டாலின் என்னை வந்து சந்தித்தபோது, இதைத்தான் அவரிடம் எடுத்துக் கூறி நாங்கள் மறைந்த திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் கொடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் என்று கூறினேன். ஆனால் ஸ்டாலின் அதில் பிடிவாதமாக இருந்தார்.

உடனே நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அப்போது அம்மா நினைவிடத்துக்கு எதிராக யார் யார் பொது நல வழக்கு போட்டார்களோ அதையெல்லாம் வாபஸ் வாங்க வைத்தார். அப்படி என்றால் யார் தூண்டுதல் பெயரில் அந்த வழக்குகள் போடப்பட்டன?

அப்பாவுக்கு ஆறு அடி நிலம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கொடுத்தேன். ஆனால் அது வேண்டாம் என நீதிமன்றம் சென்ற ஸ்டாலின், நான் ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என்று பொய் சொல்லுகிறார். ஊர் பூரா பொய் பிரசாரம் செய்கிறார். தன் அப்பா என்று கூட பார்க்காமல் கருணாநிதியை வைத்து அரசியல் செய்கிற ஒரே தலைவர் ஸ்டாலின் தான். மக்களிடம் அனுதாபத்தைத் தேடுவதற்காக நாடகம் நடத்துகிறார். அவரை வைத்து அனுதாபம் தேட வேண்டாம் என்று ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon