மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

தரமற்ற குடிநீர் கேன்: அதிகாரிகள் சோதனை!

தரமற்ற குடிநீர் கேன்: அதிகாரிகள் சோதனை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தரமற்ற குடிநீர் நிரப்பப்பட்ட கேன்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

சென்னை உணவுப் பாதுகாப்பு மண்டலத்தில் 24 குடிநீர் ஆலைகள் உள்ளன. அவற்றில் இருந்து கேன்களில் நிரப்பப்படும் நீரானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. இவற்றில் சில கேன்களில் மாசுற்ற நீர் இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் அனுமதியின்றி குடிநீர் கேன்கள் தயாரிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் வகையில், இன்று (மே 15) சென்னை கொளத்தூர், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய மூன்று இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களில் கொண்டுவரப்படும் குடிநீர் கேன்களை இன்று காலையில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, அவற்றில் இருக்கும் விவரங்களைச் சோதனையிட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஸ்டிக்கர் இருக்கிறதா, தயாரிப்பு தேதி இடம்பெற்றிருக்கிறதா, நீர் அசுத்தமாக உள்ளதா என்று கண்டறியப்பட்டது. தரமற்ற குடிநீர் கேன்களில் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள்.

கோயம்பேடு பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, 8 மினி வேன்களில் தரமற்ற குடிநீர் கேன்கள் கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது. அதில் இருந்த 580 கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்கள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

சென்னையில் தரமற்ற குடிநீர் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon