மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் 3டி ஹாரர்!

அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் 3டி ஹாரர்!

அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள லிசா படத்தின் 3டி டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் 3டி ஸ்டீரியோஸ்கோபிக் ஹாரர் திரைப்படமாக இப்படம் வரவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி இயக்குநர் ராமின் பேரன்பு படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து லிசா எனும் பேய் படத்தின் மூலம் ரசிகர்களை மிரட்ட வருகிறார். பி.ஜி. முத்தையா தயாரிப்பில் ராஜு விஸ்வநாத் எனும் அறிமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் தெலுங்கு படங்களின் கதை விவாதங்களிலும், சூர்யாவின் ‘24’ படத்தில் விக்ரம் குமாரின் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

நேற்று(மே 14) வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு மலைப் பிரதேசத்திலுள்ள எஸ்டேட் பங்களாவிற்கு தங்க வரும் அஞ்சலி, சாம் ஜோன்ஸ் சந்திக்கும் திகில் அனுபவங்களை குளுமையும் அமானுஷ்யமும் கலந்து அளித்திருக்கிறார்கள்.

அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு, பிரம்மானந்தம், சுரேகா வாணி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. பி.ஜி. முத்தையா இப்படத்தை தயாரித்து ஒளிப்பதிவும் செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி ஹாரர் படம் என்ற டேக் லைனுடன் லிசா விரைவில் திரைக்கு வரவுள்ளது.

லிசா டிரெய்லர்

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon