மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

22 தனியார் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலை!

22 தனியார் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலை!

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அடிப்படை வசதிகள், தகுதி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 537 பொறியியல் கல்லூரிகளில் 22 கல்லூரிகள் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. இதனால் அக்கல்லூரிகளில் புதிய ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், 22 தனியார் பொறியியல் கல்லூரிகளும் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. அடிப்படை வசதிகளும், தகுதி பெற்ற ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300 பாடப்பிரிவுகளில் 15,000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும்படி நேற்று (மே 14) அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட உத்தரவில் அறிவுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சில புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குநர் அருளரசு தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுபற்றிய புகார்களை இக்குழுவிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய ஆதாரங்களுடன் வழங்கப்படும் புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவின் தலைவர் அருளரசு தெரிவித்துள்ளார். குழுவை தொடர்புகொள்ள 044- 22351018, 22352299, 7598728698 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon