மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

பைக் உற்பத்தி: யமஹா சாதனை!

பைக் உற்பத்தி: யமஹா சாதனை!

யமஹா நிறுவனம் இந்தியாவில் 1 கோடி பைக்குகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான யமஹா மோட்டார்ஸ், 1985ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் ஆலை அமைத்து இருசக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனத்துக்கு, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. 34 ஆண்டுக்குப் பின்னர் தற்போது 1 கோடி உற்பத்தி மைல்கல்லை யமஹா நிறுவனம் அடைந்துள்ளது. சென்னையில் FZS-FI மாடல் 3.0 வெர்ஷன் பைக் வெளியீடு வாயிலாக இந்த இலக்கை யமஹா நிறுவனம் அடைந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்திருக்கிறது. இருசக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஸ்கூட்டர்களின் பங்கு 44 சதவிகிதமாக இருந்துள்ளது. குறிப்பாக ஃபேசினோ மாடல் ஸ்கூட்டர் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடி பைக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் 80 சதவிகித வாகனங்களும், சென்னையில் 20 சதவிகித வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தம் 77.88 லட்சம் மோட்டார் சைக்கிள்களையும், 22.12 லட்சம் ஸ்கூட்டர்களையும் யமஹா உற்பத்தி செய்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon