மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிரான மனு: உத்தரவு!

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிரான மனு:  உத்தரவு!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (மே 15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் உட்பட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காகப் பணம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது.

வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று (மே 15) விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon