மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு!

கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய விவகாரத்தில் கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றும் கூறியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் அரவக்குறிச்சியில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணன் கொடுத்த புகார் மனுவில், “கமல் பேச்சு இந்து மக்களிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியானது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருப்பதால் அவர்களின் ஓட்டுக்களை தனது கட்சிக்குப் பெற்றுத் தருவதற்காக கமல் அவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்கள் பற்றி அவதூறாகவும், இந்துக்களைத் தீவிரவாதி என்றும் சித்திரித்துப் பேசினார். இவ்வாறு அவர் பேசியது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தும். எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக, கரூர் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அரவக்குறிச்சி இடைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் 12ஆம் தேதி இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என இந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாக உரையாற்றினார்.

இது சம்பந்தமாக, நேற்று அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை கண்காணிப்பாளர் வி.விக்கிரமன் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon