மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஜெட் ஏர்வேஸ் தலைமை அதிகாரிகள் ராஜினாமா!

ஜெட் ஏர்வேஸ் தலைமை அதிகாரிகள் ராஜினாமா!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எவ்வித அறிகுறிகளும் தென்படாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி வினய் டூபே, இணை தலைமை செயலதிகாரி அமித் அகர்வால், தலைமை செய்தித்தொடர்பு அதிகாரி ராகுல் தனேஜா ஆகியோர் நேற்று (மே 14) பதவி விலகியுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எடிஹாட் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டது. எனினும், அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான வினய் டூபே மே 14ஆம் தேதியன்று தனது சொந்த காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார்” என்று தெரிவித்தது. இந்த அறிக்கைக்கு முன் இதேபோன்ற மற்றொரு அறிக்கையில், “நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அமித் அகர்வால் தனது சொந்த காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்திருந்தது.

நெருக்கடி நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் பதவி விலகியுள்ளது ஊழியர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நெருக்கடியில் சிக்கியபிறகு சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான முக்கிய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்தவர்கள்தான் வினய் டூபே, ராகுல் தனேஜா ஆகியோர். இவர்கள் இருவரும் தற்போது பதவி விலகியுள்ளதால் ஜெட் ஏர்வேஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon