மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 அக் 2019

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படமான என்.ஜி.கே. இம்மாதம் வெளியாகவுள்ளது. எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான ஏற்பாட்டில் புதிய சாதனை ஒன்றை கேரள மாநிலத்தில் நிகழ்த்தியுள்ளார் சூர்யா.

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த சூர்யாவுக்குச் சமீப வருடங்களாகச் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் அமையவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தன்னுடைய அடுத்த இன்னிங்க்ஸை கவனமாக வைக்கத் தொடங்கியுள்ளார் சூர்யா.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான என்.ஜி.கே ஓர் அரசியல் படமாகத் தயாராகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் மே 31ஆம் தேதி வெளியாகிறது.

கேரளாவில் விஜய்க்குப் பின் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ் நடிகராக சூர்யா உள்ளார். இந்த நிலையில், என்.ஜி.கே. கேரளத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. கேரளாவின் ‘வி1000 லௌவர்ஸ்’ என்ற பெண்கள் அமைப்பு, மலப்புரம் சூர்யா ரசிகர் மன்றத்துடன் இணைந்து ‘மார்ஸ்’ திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒருங்கிணைக்கப்படுவது கேரளத்தில் இதுவே முதல் முறையாகும்.

சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திருநங்கைகளுக்காகச் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon