மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

தடுமாறும் கோடை ரிலீஸ் படங்கள்!

தடுமாறும் கோடை ரிலீஸ் படங்கள்!

தமிழ் சினிமாவுக்கு மே மாதம் என்பது பொங்கல் பண்டிகைக்குப் பின் இரண்டாவது வசூல் அறுவடைக்காலம் என்பார்கள். பள்ளி, கல்லூரி விடுமுறை மாதம் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கும் என தியேட்டர் வட்டாரத்தினரின் நம்பிக்கை.

உள்ளடக்கம் சிறப்பாக இருக்கும் படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைவது இல்லை. தவறான ரிலீஸ் நடைமுறையால் நல்ல படம் சில நேரங்களில் தோல்வியைத் தழுவிவிடும். ஆனால், இது நிரந்தரமல்ல.

கோடை விடுமுறையை குறிவைத்து மே 1 அன்று வெளியான தேவராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டாவது வாரம் ஜீவா நடித்துள்ள கீ, அதர்வா நடித்துள்ள 100 ஆகிய இரு படங்கள் வசூல் ரீதியாகத் தோல்வியைச் சந்தித்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இவ்விரு படங்களும் சுமார் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தால் அதிசயம் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

இதற்கு என்ன காரணம் என தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்தபோது, ஒரு திரைப்படத்தை வசூல் ரீதியாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும், சக்திகளாக திகழும் கிராம மக்களைக் கவரவில்லை. அதனால் இனியும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்.

இந்தப் படங்களுடன் மே 11 அன்று தாமதமாக களமிறங்கிய விஷால் நடித்துள்ள அயோக்யா முதல் நாள் ரசிகர்களால் ஆரவாரத்துடன் எதிர்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்காமல் குறைய தொடங்கியுள்ளது.

சுமார் 12 கோடி ரூபாய்க்கு இந்தப் படத்தை ஸ்க்ரீன் செவன் நிறுவனம் தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ளது. பிரமாண்டமான விளம்பரங்கள் செய்து வெளியிடப்பட்ட அயோக்யா தமிழகத்தில் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றிருக்கிறது. மே 17 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் வெளிவர இருப்பதால் பார்வையாளர்களின் கவனம் புதிய படங்களை நோக்கி இருக்கின்றன. ஏற்கெனவே வெளியான படங்களின் வசூல் அதிகரிக்காது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். கோடைக்கால வசூலை மிஸ்டர் லோக்கல் அறுவடை செய்யுமா என்பதே திரையுலகினரின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon