மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

மருத்துவக் கழிவுகள்: தமிழகத்தில் ஆய்வு!

மருத்துவக் கழிவுகள்: தமிழகத்தில் ஆய்வு!

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஆய்வைத் தொடங்கியுள்ளது தமிழக மருத்துவ மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநரகம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திட மற்றும் திரவ மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்று கோரி, 2015ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாத மருத்துவமனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். அதில், தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகள் உட்பட 715 மருத்துவமனைகளில் விதிமீறல் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மருத்துவமனைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 15ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்றுகளைப் பெறாத மருத்துவமனைகளின் விவரங்களைக் கண்டறிதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (மே 14) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் நடைபெற்றது.

அப்போது, மருத்துவக் கழிவுகளை உரமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள இணை இயக்குநர்கள் தலைமையில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இதனால், விரைவில் மருத்துவக் கழிவுகள் தொடர்பான ஆய்வு தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon