மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

ஜெ-வையே குறைசொல்கிறார் தினகரன்: ஜெயக்குமார்

ஜெ-வையே குறைசொல்கிறார் தினகரன்: ஜெயக்குமார்

ஜெயலலிதாவையே குறைசொல்லும் அளவுக்கு தினகரன் வந்துவிட்டார். அவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தினகரன் பேச்சை எம்ஜிஆர் பக்தர்கள், ஜெயலலிதா பக்தர்கள், மானமுள்ள அதிமுகவினர் யாரும் கேட்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 14) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் கூறியுள்ளார். ஜெயலலிதாவையே குற்றம் சொல்லும் அளவுக்கு தினகரன் இன்று வளர்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிய அவர், “எம்ஜிஆர் ஆட்சியையே கலைத்தவர் ஜெயலலிதா என்று தினகரன் கூறுகிறார். ஜெயலலிதா இல்லாத நிலையில் இன்று அவரை தினகரன் குற்றம்சாட்டுகிறார். ஜெயலலிதாவுக்குச் செய்கிற, இதைவிட பெரிய துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜெயலலிதா உயிரோடிருந்தால் தினகரன் இவ்வாறு பேசுவாரா? எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் நம்பிக்கை கொண்ட எந்த அதிமுக தொண்டர்களும் தினகரனின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் இன்று ஜெயலலிதாவையே குறை சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள். இதுதான் அவர்களின் சுயரூபம். அது இப்போது வெளிவந்துவிட்டது” என்றார்.

திமுகவைப் பொறுத்தவரையில் தொடக்கக் காலம் முதல் அவர்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் உள்ளது என்று குற்றம்சாட்டிய ஜெயக்குமார், “எமர்ஜென்சியின்போது திமுகவினரை சிறையில் அடைத்ததற்காக இந்திரா காந்தியைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், அதன் பிறகு நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார்கள். அதன்பிறகு மீண்டும் கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பாஜக மதவாதக் கட்சி; ஒருபோதும் அவர்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்கள். ஆனால், அதன்பிறகு ஐந்து வருடங்கள் கூட்டணியில் இருந்தார்கள்.

ஒரு படகில் சவாரி செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரே நேரத்தில் மூன்று படகில் சவாரி செய்பவர்களைப் பார்க்க முடியுமா? அந்த சாமர்த்தியம் ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும்தான் உண்டு. ஒரே நேரத்தில் காங்கிரஸுடனும் பேசுவார்கள். அதேநேரத்தில் பிஜேபியிடம் தூது விடுவார்கள். அதை பாஜக தலைவரும் உறுதிப்படுத்தி விட்டார்” என்றார்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon