மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

ஹரி - சிம்பு: மீண்டும் இணைந்த ‘கோவில்’ கூட்டணி!

ஹரி - சிம்பு: மீண்டும் இணைந்த ‘கோவில்’ கூட்டணி!

லண்டன் சென்று எடைக் குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டிருந்த சிம்பு, தற்போது அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

விக்ரம் கதாநாயகனாக நடித்த சாமி 2 திரைப்படத்தைத் தொடர்ந்து ஹரி அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். முன்னணி கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள ஹரி, சூர்யாவுடன் அதிக படங்களில் பணியாற்றியுள்ளார். சாமி 2 படத்தின் பணிகள் நடைபெற்றுவந்தபோதே சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஹரி தரப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சூர்யா தற்போது காப்பான், சூரரைப் போற்று ஆகிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சூர்யா - ஹரி கூட்டணி தற்போது இணைய வாய்ப்பில்லை என்ற சூழல் உருவான நிலையில் ஹரி - சிம்பு மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

நாகர்கோவில் பகுதியை மையமாகக் கொண்டு சிம்பு, சோனியா அகர்வால் இணைந்து நடித்த கோவில் திரைப்படம் 2003ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின் சிம்பு, ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இந்தியன், கில்லி, குஷி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தைத் தவிர சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon