மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்தியாவில் குவியும் ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் குவியும் ஸ்மார்ட்போன்கள்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 7.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

குறைந்த விலை, பல்வேறு அம்சங்கள், சிறப்புச் சலுகைகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகளும் கிடைப்பதால் ஸ்மார்ட்போன் பயன்பாடும் விற்பனையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் 3.21 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டு விற்பனையை விட 7.1 சதவிகிதம் கூடுதலாகும்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த க்ஷியோமி நிறுவனம் 30.6 சதவிகிதப் பங்குகளைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 22.3 சதவிகிதப் பங்குகளுடனும், விவோ நிறுவனம் 13 சதவிகிதப் பங்குகளுடனும், ஒப்போ நிறுவனம் 7.6 சதவிகிதப் பங்குகளுடனும் ரியல்மீ நிறுவனம் 6 சதவிகிதப் பங்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ஜனவரி - மார்ச் மாதங்களில் விற்பனையான மொத்த மொபைல் போன்களில் சாதாரண வகை பீச்சர் போன்கள் 50 சதவிகிதப் பங்குகளைப் பெற்றுள்ளன. இவ்வகை போன்கள் மொத்தம் 3.23 கோடி எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. மொபைல் போன்களின் விற்பனை விலை சராசரியாக ரூ.11,3267 ஆக இருந்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 3.3 சதவிகிதம் கூடுதலாகும்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon