மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வாட்ஸனின் அர்ப்பணிப்பு: நெகிழும் ரசிகர்கள்!

வாட்ஸனின் அர்ப்பணிப்பு: நெகிழும் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடர் ஞாயிற்றுக் கிழமையுடன் (மே 12) நிறைவடைந்த போதிலும் அவை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து குறையவில்லை.

இறுதிப்போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவரும் ரசிகர்கள் தோனிக்கு தவறுதலாக ரன் அவுட் கொடுத்ததாக கூறிவருகின்றனர்.

கடைசிப் பந்தில் சென்னை அணி தோல்வியைச் சந்தித்திருந்தாலும் தனது பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றவர் வாட்ஸன். இரத்தக் காயத்துடன் பந்துகளை விரட்டும் இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

வலியை வெளிக்காட்டாமல், ஆட்டத்திலிருந்து பின்வாங்காமல் இறுதிவரை போராடியது வாட்ஸனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது. போட்டி முடிந்தபின்னர் அவர் காயங்களுக்கு தையல் போடப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாட்ஸனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தற்போது அவர் சரிவர நடக்க முடியாமல் தனது பெட்டியை இழுத்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon