மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

தனி ஒருவன் 2: உற்சாகமளித்த இயக்குநர் ராம்

தனி ஒருவன் 2: உற்சாகமளித்த இயக்குநர் ராம்

தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இயக்குநர் மோகன் ராஜாவுக்கு உற்சாகமளிக்கும் விதமாக ராம் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2015ஆம் ஆண்டு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மோகன் ராஜா இயக்கிய இப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலொன்றை இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதன் திரைக்கதை டிஸ்கஷனில் இயக்குநர் மோகன் ராஜா ‘எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடலாம்ல’, என தன் உதவி இயக்குநர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ‘இருநூறு சதவீதம்’ என பதிலளித்துள்ளனர். அப்போது வந்த இயக்குநர் ராமின் அழைப்பு மோகன் ராஜாவையும் அவரது உதவி இயக்குநர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராம் “ராஜா மறுபடியும் தனி ஒருவன் பாத்திட்டுயிருக்கேன். மிகப் பெரிய உழைப்பு. அடுத்த பார்ட் கவனமா பண்ணுங்க” எனக் கூறியுள்ளார். மேலும் “தனி ஒருவன் அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன் ராஜா. எதிர்ப்பார்ப்புகளுடனும் பிரியங்களுடனும்...” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராம்.

ஒரு கமர்சியல் படத்தின் அடுத்த பாகத்துக்கு யதார்த்தமான படைப்புகளைத் தரும் இயக்குநர் ராம் பாராட்டி பேசியிருப்பதை ஆரோக்கியமாக இருப்பதாக நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon