மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

669: அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்!

669: அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்!

ஆறு நாட்களுக்கு ஆறு முறை உடலுறவு கொள்வதன் மூலமாக வாழ்வை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் உலகின் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா.

உலகளவில் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம். இதன் நிறுவனர் மற்றும் தலைவரான ஜாக் மா, ஒவ்வொரு ஆண்டும் மே 10ஆம் தேதியன்று அலி டே எனும் தினத்தைத் தனது நிறுவனத்தின் சார்பில் கொண்டாடி வருகிறார். அன்றைய தினம் அலிபாபா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார்.

அந்த வகையில், கடந்த 10ஆம் தேதியன்று சீனாவில் 102 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் ஜாக் மா. அப்போது, திருமண வாழ்வை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு அறிவுரையை அவர் வழங்கினார்.

“பணியில் சிறந்து விளங்கிட 996 என்ற மந்திரத்தைப் பின்பற்றுகிறது அலிபாபா. அதாவது, ஒரு நாளின் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆறு நாட்களும் நிறுவனத்துக்காகப் பணியாற்ற வேண்டும். அதேபோல, திருமண வாழ்க்கைக்கு 669 என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை உடலுறவு என்ற வகையில், ஆறு நாட்கள் தொடர வேண்டும்.

திருமணம் என்பது வளத்தைப் பெருக்கவோ, வீடு வாங்கவோ, கார் வாங்கவோ அல்ல. திருமணம் என்பது இருவரும் இணைந்து குழந்தை பெறுவதற்கானதாகும்” என்று ஜாக் மா அந்த விழாவில் தெரிவித்தார். சீனாவில் 9 என்ற எண்ணுக்கு நீண்ட என்ற அர்த்தமுண்டு.

ஜாக் மாவின் 669 கருத்து அலிபாபாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைச் சமூகவலைதளங்களில் இயங்குவோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon