மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

தோனியை விமர்சித்த குல்தீப்

தோனியை விமர்சித்த குல்தீப்

தோனியின் முடிவு பல நேரங்களில் தவறாக முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

தோனி தனது அதிரடி ஆட்டத்திற்காக, விக்கெட் கீப்பிங்கிற்காக புகழப்பட்டதை விட அதிகளவில் சிறந்த கேப்டன் என புகழப்பட்டுள்ளார்.

தோனி தலைமையில் ஐசிசி டி20 கோப்பை, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் பொறுப்பை துறந்த பின்னரும் தொடர்ந்து கோலிக்கு களத்தில் ஆலோசனை கூறிவருகிறார் தோனி. இதை கோலியும் பல முறை உறுதிபடுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் தோனியின் அணி வழிநடத்துதல் திறன் குறித்து பேசியுள்ள நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் நேர்மறையாக காட்டமாக விமர்சித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ்வும் பங்குபெற்றுள்ளார். நேற்று (மே 13) மும்பையில் நடைபெற்ற ‘சியாட் கிரிக்கெட் தரவரிசை விருது’ நிகழ்வில் கலந்து கொண்டு குல்தீப் யாதவ் பேசினார்.

அப்போது அவர், “தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தவறாகவே முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் பந்துவீசி அது நடக்காமல் போய்விடும். ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னதுபோன்று பந்துவீசினேன்; நடக்கவில்லை என்று கேட்கக்கூட முடியாது.

அவர் வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசக்கூட மாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அதிலும் அந்த நேரத்தில் முக்கியமான விஷயத்தை, டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் வந்து பேசுவார்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon