மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

பொள்ளாச்சி: திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை!

பொள்ளாச்சி: திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை!

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில் இன்று சோதனை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள்.

கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் புகார் அளித்த இளம்பெண்ணின் சகோதரைத் தாக்கிய வழக்கில் மணிவண்ணன் என்பவர் சரணடைந்தார். போலீசாரின் விசாரணைக்குப் பின்னர், இவரது பெயரும் பாலியல் புகாரில் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கைக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான சிபிசிஐடி தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று சிபிஐ பொள்ளாச்சி பாலியல் புகார் குறித்த தனது விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து சிபிசிஐடி வசமிருந்த ஆவணங்கள் அனைத்தும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று (மே 14) பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரி கருணாநிதி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு அங்கு ஆய்வு செய்தது. வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அங்குள்ள தடயங்கள் மற்றும் ஆவணங்களைச் சோதனையிட்டு வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon