மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

வெயிலை விட மெயில் தான் சூடா இருக்கு: அப்டேட் குமாரு

வெயிலை விட மெயில் தான் சூடா இருக்கு: அப்டேட் குமாரு

வெயில் கொடுமையை விட மெயில் கொடுமை தாங்க முடியலை. அவர் ஒரு ஃப்ளோவுல அடிச்சு விடுறமாதிரி அப்பவே டிஜிட்டல் கேமரா வச்சிருந்தேன், மெயில் அனுப்புனேன்னு சொல்லிட்டு போயிட்டார். அதை பிடிச்சுகிட்டு இவங்க வார வரத்து இருக்கே அடேயப்பா. சவுகிதார் ஜோக் எல்லாம் இப்ப பழசாகி டிரெண்டுல போறது மெயில் மேட்டர் தான். எனக்கே பரிதாபமா போச்சு. ‘ஒரு பிரதமர் என்றும் பாராமல்’ இப்படியா நடந்துகிடுறது? இதுல என்னைய வேற என்ன குமாரு நீ ஏதும் கமெண்ட் சொல்றீயான்னு நாலு பேரு இன்பாக்ஸ் பக்கம் வந்து கேட்குறாங்க. இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் நான் ரஜினி மாதிரி. கருத்து தெரிவிக்க விரும்பவில்லைன்னு ஒரு கருத்தை தெரிவிச்சிடுவேன். எப்பூடி.. அப்டேட்டை பாருங்க.

@senthilcp

இன்னும் 10 வருடங்களுக்குப்பிறகு நிறுவப்படும் சிலைகளின் கையில் செல்போன் ஒரு அங்கம் வகிக்கலாம்

@sathyathetruth

தோனிய ஒருத்தன் திட்னான்னா அவன் ரோகித் பேனா இருக்கனும்னு இல்ல பார்த்திவ் படேல் பேனா கூட இருக்கலாம்

@shivaas_twitz

அப்போ, உலகின் முதல் மெயிலே spam mail தான்னு சொல்லுங்க...

@smhrkalifa

நாம் செல்லும் பைக்கின் வேகம் குறைய குறைய நமது பொறுப்பு கூடுகிறது.

@sultan_Twitz

நமக்காக வாதாடக்கூடிய வக்கீல் நமது நாக்கு மட்டுமே!

@Kozhiyaar

உலகிலேயே கொடுமையான விடயம் கழிவறையில் அமர்ந்திருக்கும் பொழுது நிகழும் கொசுக்கடிகளே!!

@skpkaruna

இது உண்மையான செய்திதான். ஆட்சியமைக்க மெஜாரிட்டி குறைந்தால் திமுக ஆதரவளிக்க வேண்டும் என பாஜக கேட்டுள்ளனர். ராகுல்காந்தியை பிரதமராகவும், மாயாவதி, அகிலேஷை துணைப் பிரதமராகவும் தேர்ந்தெடுத்தால் ஆதரவளிப்பதாக திமுக தலைவர் கூறியுள்ளார். இது குறித்து பரிசீலித்து சொல்வதாக பாஜக கூறியுள்ளது.

@parveenyunus

பாஜகவுடன் பேச மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருவது உண்மைதான் - தமிழிசை # தமிழ்நாட்டில் வெயில் அதிகம் என்பதும் உண்மைதான்.

@Kozhiyaar

பணியிடத்தில் கண்ணாடி வழியே மழை பொழிவதை பார்க்கும் பொழுது, நம்முள் இருக்கும் குழந்தை குதித்து கூத்தடிக்க ஆரம்பித்து விடுகிறது!!!

@ஜால்ரா காக்கா

1972குஜராத்தில் வெளிநாட்டவர் தன் ஆப்பிள்i7ல் இருந்து ஆண்ட்ராய்ட் phoneக்கு படத்தை சேர்இட் மூலம் அனுப்ப முயற்சித்து கொண்டு இருந்தார் இதைபார்த்த டீ விற்று கொண்டு இருந்த அந்த சின்ன பையன் ஓடி வந்து சார் apple டூ android ஷேர்பன்ன முடியாது நீங்க அந்த picயை ஈமெயில் பன்னுங்கன்னு சொன்னார்.

@parveenyunus

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசன் பேச்சுக்கு கருத்து கூற விரும்பவில்லை - ரஜினிகாந்த் # நல்லவேளை கருத்து சொல்றேன்னுட்டு 'யாரு அந்த கோட்சே'ன்னு கேக்காம போனீங்களே..!

@sultan_Twitz

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் #

இப்ப மட்டும் என்ன குற்றால அருவியில குளிச்ச மாதிரியா இருக்கு

@mohanramko

முழு முட்டையை சோத்துல மறைப்பது தான், பிரியாணி

@shivaas_twitz

Boss: ரிப்போர்ட் எங்கயா..?

Sub: அப்பவே உங்களுக்கு mail பண்ணிட்டேன் சார்...

Boss: அப்பவேன்னா.. 1987லயா? தெளிவா சொல்லு மேன்..

@manipmp

நல்லவங்களுக்கு ஆண்டவன் நிறையா கொடுப்பான்..

ஆனா E.M.I யில புடிச்சுக்குவான்

@Thaadikkaran

கொசு தொல்லை தாங்கலேன்னு நெட் கட்டி விட்டு தூங்குனா, கொசுவெல்லாம் நெட்டுக்குள்ள கிடக்கு. இப்போ யாருக்கு யார் பாதுகாப்புன்னு தெரில..!

@manipmp

பரிட்சைக்கு படிக்கும்போது

கேட்கும் பாடல்களுக்கு

ரசிப்புத்தன்மை அதிகம்

@parveenyunus

பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களை காங்கிரஸ் ஏ.டி.எம் போல பயன்படுத்தியது - மோடி # ஏடிஎம் மேல உள்ள அந்த கோபத்துல தான் டீமானிடைசேஷன் கொண்டு வந்தீங்களா..?

@krishnaskyblue

ஒருவனுக்கு உதிக்கும் சிந்தனை எந்த மொழியில் உதிக்கிறதோ அதுவே அவன் தாய்மொழி ~யாரோ ஒரு மகான்

-லாக் ஆஃப்

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon