மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

கார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு!

கார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு!

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று வர வைப்புத் தொகையாக நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்திய ரூ.10 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது

ஐஎன்எக்ஸ் மீடியா & ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம் செல்ல நீதிமன்ற பொதுச்செயலாளரிடம் வைப்புத் தொகையாக ரூ.10 கோடி பணம் செலுத்த உச்ச நீதிமன்றம் ஜனவரியில் உத்தரவிட்டது. இதனிடையே இம்மாதம் மற்றும் அடுத்த மாதத்தில் மீண்டும் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

மீண்டும் முந்தைய நிபந்தனைகளுடன் ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்தி வெளிநாடு செல்ல தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கானா அமர்வு மே 7ஆம் தேதி அனுமதியளித்தது. ஏற்கெனவே ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்தியுள்ள நிலையில் மீண்டும் ரூ.10 கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதால் பழைய ரூ.10 கோடியை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை கார்த்தி சிதம்பரம் நாடினார்.

இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கானா அமர்வில் இன்று (மே 14) விசாரணைக்கு வந்தது. ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் முறையிட அறிவுறுத்தியுள்ளனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon