மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

குடிநீர் சிக்கனம்: தமிழக அரசு வேண்டுகோள்!

குடிநீர் சிக்கனம்: தமிழக அரசு வேண்டுகோள்!

பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

ஒவ்வொரு ஆண்டும் மழையின் அளவு குறைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஜனவரி முதல் மே மாதம் வரையிலான மழைப்பொழிவு குறைவதால் தமிழகமெங்கும் நீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெருநகரங்கள் மட்டுமல்லாமல், சிற்றூர்களிலும் தண்ணீருக்கு மக்கள் அல்லாடி வருகின்றனர்.

இந்த ஆண்டும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம். இது தொடர்பாக, அதன் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் இன்று (மே 14) செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தின் சராசரி மழைப்பொழிவான 960 மில்லி மீட்டரை விட 811.7 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்தது எனவும், 2019 ஜனவரி முதல் மே வரை பொழிய வேண்டிய 108 மில்லி மீட்டர் மழைக்குப் பதிலாக 34 மில்லி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் மூலமாக 4 கோடியே 23 லட்சம் மக்கள் தினமும் பயன் பெற்று வருகின்றனர். இதனால் நாளொன்றுக்கு 2,146 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் மழை அளவு வழக்கத்தை விட 69 சதவிகிதம் குறைந்துள்ளதால், இந்த வருடம் சராசரியாக 1,856 மில்லியன் லிட்டர்கள் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

குடிநீரானது கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை உறுதிப்படுத்திக்கொள்ள, தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் கசிவு, மின் மோட்டார் பழுது ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 14 மே 2019