மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

கிராமப்புற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி!

கிராமப்புற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி!

கிராமப்புறங்களைச் சேர்ந்த வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.700 கோடி நிதியுதவியை நபார்டு வங்கி அறிவித்துள்ளது.

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான நபார்டு, வேளாண் மற்றும் கிராமப்புற தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து பங்களித்து வருகிறது. இதற்கான நிதியுதவியில் இதுவரையில் இதர அமைப்புகளுடன் இணைந்து நபார்டு வங்கி தனது பங்களிப்பையும் வழங்கி வந்தது. இந்நிலையில் தற்போது நபார்டு வங்கி பிரத்தியேகமாக நிதித் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. அதன்படி ரூ.500 கோடி நிதியுதவி கிராமப்புற வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனுடன் கூடுதலாக ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதித் திட்டத்தில் பங்குபெறும் இதர பங்குதாரர்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிதியுதவியால் கிராமப்புறங்களைச் சேர்ந்த வேளாண்மை, உணவு உள்ளிட்ட துறைகள் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று நபார்டு வங்கியின் தலைவரான ஹர்ஸ் குமார் பன்வாலா, பிசினஸ் லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்களித்து வரும் நபார்டு வங்கியின் முழுப் பங்கையும் அரசு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon