மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

சமூக பாகுபாட்டை கேள்வி கேட்கும் ஒத்த செருப்பு!

சமூக பாகுபாட்டை கேள்வி கேட்கும் ஒத்த செருப்பு!

ரா. பார்த்திபன் இயக்கத்தில் ஒத்த செருப்பு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாந்தனு, பார்வதி நாயர் உடன் பார்த்திபனும் நடித்து இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பார்த்திபன், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு. இப்படத்தின் டீஸரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

டீஸரில் நடிகர்களின் உருவத்தைக் காட்டாமல் கதை நிகழும் சூழலை மட்டுமே பதிவு செய்துள்ளது புது முயற்சியாக இருக்கிறது. சில நிமிடக் காட்சிகள் என்றாலும் சப்தங்கள், பின்னணி இசை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இது கிரைம் திரில்லர் படம் என்ற நினைப்பை வரவழைக்கிறது. டீஸரின் இறுதியில், 'பொறக்கும் போதே எல்லாரும் அம்மணத்தோட தான பொறக்கணும்?, சிலர் மட்டும் ஏன் கோவணத்தோட பொறக்கணும்?, சிலர் ஏன் கோடீஸ்வரனா பொறக்கணும்..? என பார்த்திபன் பேசும் வசனம் படத்தின் கதைக் கருவை குறிப்பதாக இருக்கிறது.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பார்த்திபனின் பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

ஒத்த செருப்பு டீஸர்

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon