மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கார் விற்பனையைக் குறைத்த தேர்தல்!

கார் விற்பனையைக் குறைத்த தேர்தல்!

தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு, காப்பீட்டுச் செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்துக்கான கார் உள்ளிட்ட வாகன விற்பனையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2,47,541 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் விற்பனையான 2,98,504 வாகனங்களை விட 17.07 சதவிகிதம் குறைவாகும். இதில் கார் விற்பனை 19.93 சதவிகிதமும், பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 6.67 சதவிகிதமும், வேன் விற்பனை 30.11 சதவிகிதமும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த வீழ்ச்சி குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொது இயக்குநரான விஷ்ணு மாத்துர், செய்தியாளர்களிடையே பேசுகையில், தேர்தல் நிறைவடையும் வரை வாடிக்கையாளர்கள் வாகனங்கள் வாங்குவதில் நிலைத்தன்மையற்று இருந்ததால் வாகன விற்பனை சரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அதிகமான காப்பீட்டுச் செலவுகளும் விற்பனையைக் குறைத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

பயணிகள் வாகனங்கள் மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன விற்பனையைப் பொறுத்தவரையில் 16.36 சதவிகித சரிவுடன் மொத்தம் 16,38,388 வாகனங்கள் மட்டுமே ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon