மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

இருசக்கர வாகனப் பயணம்: காவல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

இருசக்கர வாகனப் பயணம்: காவல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதிய விபத்து ஒன்றில் காயமடைந்த கணேசன், ரகு ஆகியோர் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு, நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் நேற்று (மே 13) விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இவ்வாறு நான்கு பேர் ஒரே வாகனத்தில் செல்லும்போது, ஓட்டுபவருக்குக் கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்பட்டு, நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதால் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். அதனைக் கருத்தில்கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள்ளதாகக் கூறி, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது என்றாலும், காவல் துறையினர் இதைத் தடுப்பது குறித்துக் கண்டுகொள்வதில்லை எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon