மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

பெளவ் பெளவ்: விருதுகள் குவித்த தமிழ்ப்படம்!

பெளவ் பெளவ்: விருதுகள் குவித்த தமிழ்ப்படம்!

பரத்தின் சிம்பா, வரலக்ஷ்மியின் டேனி, அன்புள்ள கில்லி படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் நாய் சென்டிமென்ட்டிற்கு துணை சேர்க்கும் வகையில் மற்றொரு திரைப்படமும் தயாராகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரதீப் கில்கார் இயக்கும் பெளவ் பெளவ் என்ற இத்திரைப்படம் மற்ற படங்களில் வருவது போல வெறும் சண்டைகாட்சிகளில் மட்டும் நாயை பயன்படுத்தாமல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். தனிமையில் இருக்கும் ஐந்து வயது சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள அன்பை பற்றி பேசும் இப்படம் பல்வேறு உலகத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு கவனம் பெற்றுள்ளது.

கலிபோர்னியாவில் நடைபெற்ற லவ் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான விருதை பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற குழந்தைகள் திரைப்படவிழாவில் தொடக்கத் திரைப்படமாகவும்(opening film) திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது பெளவ் பெளவ்.

தி லண்டன் டாக்கிஸ் புரொடக்‌ஷன் வென்சர் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon