மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

விஜய் சேதுபதியின் லாபம்: ஷூட்டிங் அப்டேட்!

விஜய் சேதுபதியின் லாபம்: ஷூட்டிங் அப்டேட்!

விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் ஆறு படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பேட்ட, சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது அவர் நடிப்பில் பல படங்கள் தயாராகிவருகின்றன. இந்த ஆண்டு மேலும் நான்கு படங்கள் வரை வெளியாக உள்ளன.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி புறம்போக்கு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லாபம். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவந்தது. தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் நிறைவடைந்துள்ளது. விஜய் சேதுபதியும் ஸ்ருதி ஹாசனும் புல்லட்டில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். கிராமப்புற பின்னணியில் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon