மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

முழுமையடையாத நிலச்சீர்திருத்த முயற்சிகள்!

முழுமையடையாத நிலச்சீர்திருத்த முயற்சிகள்!

1950களில் மறுபகிர்வு செய்வதற்கு நாட்டில் இருந்த மிகப்பெரிய வளம் நிலம். அதுவே மிக முக்கியமான உற்பத்திக் கருவியாகவும் இருந்தது. நில உச்சவரம்பு சட்டங்களை இயற்றி, வரம்புக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடமிருந்து உபரி நிலத்தைக் கையகப்படுத்தி, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அவற்றைக் கொடுக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டது.

நிலத்தை மறுபகிர்வு (land redistribution) செய்வதில் கடந்த எழுபதாண்டுகளில் மாநில அரசுகள் சாதித்தது என்ன என்பதைப் பார்ப்போம். வேளாண் கணக்கெடுப்பு (agriculture census) 2010-11, 2011 சாதிவாரியான சமூக-பொருளாதார கணக்கெடுப்பு (socio-economic caste census, 2011) நமக்கு கீழ்வரும் விவரங்களைத் தருகின்றன. இந்தியாவில் 32 விழுக்காடு விவசாய நிலம் வெறும் 5 விழுக்காடு விவசாயிகளிடம் குவிந்துள்ளது. ஊரகக் குடும்பங்களில் 56.4 விழுக்காடு குடும்பங்கள் நிலமற்றவை

உபரி நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டிய மொத்த நிலங்களில் வெறும் 12.9 விழுக்காடு நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயம் செய்பவர்களில் 85 விழுக்காடு மக்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளே (5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்). நாட்டின் மொத்த விளைநிலங்களில் இவர்களிடம் இருப்பது 45 விழுக்காடு நிலங்கள் மட்டும்தான்.

மேற்கு வங்காளம், கேரளா என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில மாநிலங்கள் மட்டுமே நிலங்களை மறுபகிர்வு செய்வதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டன. நாட்டின் மக்கள்தொகையில் 68.84 விழுக்காடு மக்கள் வாழும் ஊரக இந்தியாவில் இன்றும் இதுதான் நிலையென்றால், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நிலவுடைமை எவ்வளவு பரவலாக இருந்திருக்கும் என்பதையும், நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு வேலைசெய்த ஏழை விவசாயிகளின்மீது எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருப்பர் என்பதையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் நிலவுடைமையை எடுத்துக்கொண்டால், தேசிய அளவில் உள்ள நிலவுடைமையின் போக்கோடு அது ஒத்துப்போகிறது. இதைப்பற்றி வேளாண் கணக்கெடுப்பு 2010-11, 2015-16 தரும் தகவல்களைப் பார்ப்போம்:

ஆதாரம்: வேளாண் கணக்கெடுப்பு 2010-11, 2015-16

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon