மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

நானியுடன் மீண்டும் இணைந்த நிவேதா

நானியுடன் மீண்டும் இணைந்த நிவேதா

ஜெர்ஸி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நானி நடிக்கும் 25ஆவது படத்தில் நிவேதா தாமஸ் இணைந்துள்ளார்.

குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக தமிழில் அறிமுகமான நிவேதா தாமஸ் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா படங்களில் நடித்ததன் மூலம் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பவராக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் இவர் நானி நடிக்கும் 25ஆவது படத்தில் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.

சமீபத்தில் வந்த நானியின் ஜெர்ஸி(தெலுங்கு), வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது 25ஆவது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நானி. இவரது முதல் படத்தை இயக்கிய மோகன கிருஷ்ணா தான் 25ஆவது படத்தின் இயக்குநர்.

வி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் நடிக்கிறார். மேலும் மற்றொரு கதாநாயகியாக நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளார்.

நின்னுக் கோரி, ஜென்டில்மேன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து நானியுடன் நிவேதா தாமஸ் இணையும் மூன்றாவது படமிது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon