மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

விஷாலுக்கு ஜோடியான அஜித் பட நடிகை!

விஷாலுக்கு ஜோடியான அஜித் பட நடிகை!

விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அயோக்யா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக அவர் ராணுவ அதிகாரியாக புதிய படத்தில் நடிக்கிறார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்திலும் ராணுவ அதிகாரியாக விஷால் நடித்திருந்தார். தற்போது அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திலும் விஷால் இந்தக் கதாபாத்திரத்தையே ஏற்றுள்ளார். இதனாலே இது இரும்புத்திரை 2ஆக இருக்குமோ என்ற பேச்சு நிலவியது. தற்போது இது புதியக்களத்தில் உருவாவது உறுதியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக அவர் நடிக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் அந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னையில் காவல் நிலையம் ஒன்றில் நடைபெறும் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 14 மே 2019