மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

எதற்கு முன்னுரிமை அளித்து வாக்கு?

எதற்கு முன்னுரிமை அளித்து வாக்கு?

வேலைவாய்ப்பு, குடிநீர், சுகாதாரம் ஆகிய மூன்று முக்கியக் காரணிகளை முன்னிறுத்தித்தான் இந்த முறை மக்கள் தங்களது வாக்குகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கமும், நேஷனல் எலெக்‌ஷன் வாட்ச் அமைப்பும் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. மே 19ஆம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் எந்தப் பிரச்சினையை முன்னிறுத்தி மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துகின்றனர் என்ற ஆய்வை கடந்த ஆண்டின் இறுதியில் (2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்) இந்திய ஜனநாயக சீர்திருத்தச் சங்கமும், நேஷனல் எலெக்‌ஷன் வாட்ச் அமைப்பும் இணைந்து நடத்தியது.

31 விதமான பிரச்சினைகள் மற்றும் காரணிகளைப் பட்டியலிட்டு ஆய்வில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சிறந்த வேலைவாய்ப்புகள் தேவை என்பதை முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் யாருக்கு வாக்கு என்பதை முடிவு செய்கிறார்கள் என்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. 46.80 விழுக்காடு மக்கள் சிறந்த வேலைவாய்ப்பைத்தான் முதல் காரணியாகக் கூறியுள்ளனர். சிறந்த சுகாதார வசதிகளை 34.60 விழுக்காட்டினரும், குடிநீர் தேவைகளை 30.50 விழுக்காட்டினரும், சிறந்த சாலை வசதிகளை 28.34 விழுக்காட்டினரும், சிறந்த போக்குவரத்து வசதிகளை 27.35 விழுக்காட்டினரும் ஓட்டு போடுவதற்கான காரணியாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான கேள்வியும் இதில் ஒன்றாக இருந்தது. தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாக்களிப்போம் என்பவர்கள் எண்ணிக்கை என்பது குறைவாகவே இருந்துள்ளது. 31 காரணிகளுக்கான பட்டியலில் 30ஆவது இடத்தில்தான் தீவிரவாதம் உள்ளது. ஆனால், இது பாலகோட் பதிலடித் தாக்குதலுக்கு முன்பே நடத்தப்பட்ட ஆய்வு. அதேபோல வேளாண் சார்ந்த பிரச்சினைகளையும் முன்னிறுத்தி மக்கள் தங்கள் வாக்கு யாருக்கு என்பதை அதிக அளவில் முடிவு செய்கின்றனர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

வேளாண்மைக்குத் தேவையான தண்ணீர் இருப்பு 26.40 விழுக்காட்டினர் வாக்குக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய ஆறாவது முக்கியக் காரணியாக உள்ளது. வேளாண் கடன் 25.62 விழுக்காட்டினரின் முன்னுரிமைக் காரணியாக ஏழாவது இடத்திலும், வேளாண் பொருட்களின் அதிக விலை 25.41 விழுக்காட்டினரின் முன்னுரிமைக் காரணியாக எட்டாவது இடத்திலும், விதைகள் மற்றும் உர மானியம் 25.06 விழுக்காட்டினரின் முன்னுரிமைக் காரணியாக ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 14 மே 2019