மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

கார்த்தியுடன் மீண்டும் இணைந்த அம்மு

கார்த்தியுடன் மீண்டும் இணைந்த அம்மு

பிரதான கதாபாத்திரங்களைக் கடந்து குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் ராட்சசன் படத்தில் முனிஷ்காந்தின் மகளாக நடித்திருந்த அம்மு அபிராமி நல்ல கவனம் பெற்றார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் அறிமுகமான அபிராமி, தற்போது மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தியைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர். இருவரும் சகோதர, சகோதரியாக நடிக்க இவர்களது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.

ஏப்ரல் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தில் அபிராமி இணைந்து நடிப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். த்ரில்லாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருப்பதாகக் கூறியுள்ள அவர், பெரிய இயக்குநர், குழுவுடன் பணியாற்ற ஆர்வமாய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் இசையமைக்கிறார். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் பேர்லல் மைண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon