மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: நெய் அப்பம்

கிச்சன் கீர்த்தனா: நெய் அப்பம்

சுற்றுலா ஸ்பெஷல்

பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பயணத்துக்காகத் திட்டமிடுவதும், அதற்காக எதிர்பார்ப்பதும் நம்முள் நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். விடுமுறைக்குச் செல்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர் என்று கண்டறிந்தனர். இப்படிப்பட்ட மகிழ்ச்சிக்குத் துணையாக இருப்பது நாம் பயணத்தின்போது எடுத்துக் கொள்ளும் உணவுகளும்தாம்.

என்ன தேவை?

பச்சரிசி, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

வாழைப்பழம் - ஒன்று (மசித்துக்கொள்ளவும்)

கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய், தேங்காய் எண்ணெய் - தலா அரை கப்

எப்படிச் செய்வது?

பச்சரிசியைக் கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, விழுதாக அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையைப் பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, அப்பமாகச் சுட்டு எடுக்கவும்.

என்ன பலன்?

இதற்கு சைடிஷ் தேவையில்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது. வெளியிடங்களில் இருந்தாலும் நம் வீட்டில் தயாரிக்கப்படும் விசேஷ உணவுக்கான உணர்வை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கேற்ற ருசியான உணவு இது. எடுத்துச் செல்வதும், தேவையான அளவு சாப்பிடுவதும் எளிது.

நேற்றைய ரெசிப்பி: எனர்ஜி லட்டு

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது