மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 மே 2019

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ் அப் முதலில் ஒரு பூங்கொத்தை அனுப்பி, பின் தொடர்ந்து செய்தியையும் அனுப்பியது.

“தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று மே 12ஆம் தேதி 65 ஆவது பிறந்தநாள். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பரப்புரையில் தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர் எடப்பாடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் . ஓட்டப்பிடாரம் தொகுதியில் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். மற்றபடி தமிழக முதல்வரின் பிறந்த நாள் என்ற சுவடுகூட நேற்று தென்படவில்லை. முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி நீர்மோர் பந்தல்கள் திறக்குமாறு அதிமுக சார்பில் அறிவிப்பு இல்லை. எந்த ஒரு அமைச்சரும் முதல்வருக்கு வாழ்த்து விளம்பரம் வெளியிடவில்லை.

தனது பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில் முதல்வருக்கு விருப்பமில்லை என்கிறார்கள் அவரது தரப்பினர். சென்ற வருடமே பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை. இந்த வருடமும் தேர்தல் முடிவுகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மூலம் விமர்சனங்கள் எழுந்து, நான்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூடக் கருதியிருக்கிறார் முதல்வர். அதனால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே முதல்வரின் உதவியாளர், நமது அம்மா நாளிதழ் உட்பட அனைத்து பத்திரிகைகளுக்கும் தொடர்புகொண்டு முதல்வரை வாழ்த்திப் பிறந்த நாள் விளம்பரங்கள் வந்தால் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே எந்தப் பத்திரிக்கையிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை என்கிறார்கள்.

முதல்வரின் ஆதரவாளர்கள் இவ்வாறு விளக்கம் சொல்ல, உண்மை நிலவரமோ வேறு என்கிறார்கள் அதிமுகவில் உள்ள சிலர். இந்த வருடம் முதல்வரின் பிறந்த நாளுக்காக நமது அம்மா நாளிதழுக்கு தொடர்புகொண்டு வாழ்த்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்று கேட்டவர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட நான்கே நான்கு அமைச்சர்கள் மட்டும்தான். மற்ற எந்த அமைச்சருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வரின் பிறந்த நாள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலைமை மாறலாம் என்ற அமைச்சர்களின் கணிப்புதான்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு எதிராகத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அன்றே, பல அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேட்டி கொடுக்கலாம் என்ற ஒரு நிலை அதிமுகவுக்குள் நிலவிவருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியைப் பல்வேறு வசீகர வாசகங்கள் போட்டு வாழ்த்தி தினகரனிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம் என்று பல அமைச்சர்கள் தங்களது பர்சனல் வட்டாரத்தில் பேசியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் அறிந்துதான், அதாவது பல அமைச்சர்கள் தன்னைப் புறக்கணிக்கும் மனநிலையில் இருப்பதை அறிந்துதான், முதல்வரே பிறந்த நாளைப் புறக்கணிக்கும் முடிவெடுத்தார் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரிதாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை. தாமதமாகத் தகவல் அறிந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

திங்கள் 13 மே 2019