மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ரஜினிக்குப் பின்னோக்கி நகரும் வயது!

ரஜினிக்குப் பின்னோக்கி நகரும் வயது!

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் கதைக்களம் மும்பை என்பதாலோ என்னவோ பாலிவுட் நடிகர்கள் அதிக அளவில் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடிக்கும் தர்பார் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்து நடிக்கிறார். ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வில்லன் கதாபாத்திரம் வலிமையாகப் படைக்கப்பட்டால்தான் ரஜினி கதாபாத்திரத்திற்கான மாஸ் இருக்கும் என்பதால் முக்கிய நடிகர்கள் பலர் வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். வில்லனின் மகன் கதாபாத்திரத்தில் பிரதீக் பாபர் ஒப்பந்தமான நிலையில், மலையாள நடிகர் செம்பன் வினோத்தும் வில்லன்களில் ஒருவராக இணைந்தார். தற்போது ரஜினிகாந்தின் உயர் அதிகாரியாக தலீப் தாஹில் இணைந்துள்ளார்.

“நகரைச் சுத்தப்படுத்தும் பணிக்கு எனது கதாபாத்திரம் ரஜினிக்கு உதவும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் எனது படப்பிடிப்பு ஆரம்பமானது” என்று தலீப் தாஹில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இவர் 1995ஆம் ஆண்டு ‘அட்டாங் ஹி அட்டாங்’ என்ற படத்தில் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்திருந்தார். அதன் பின் மற்றொரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் வெளியாகாமலே போனது.

“24 வருடங்களுக்குப் பின் அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் போது அவரைப் பார்க்கையில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. 25 வயது இளைஞன் போல் காட்சியளித்தார். இதை அவரிடம் கூறியபோது பலமாக சிரித்தார்” என்று தலீப் தாஹில் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்போடு தலீப் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றுவிடும்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon